எனது இரண்டாவது கட்டுரையே அரசியல் பற்றி எழுத வேண்டியது ஆகி விட்டது. வேறு எதை பற்றி மாறன் குடும்பத்துக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் நடக்கும் போட்டியை பற்றி தான்.
மதுரை தினகரன் தாக்குதல் சம்பவத்தின் எதிர்பாராத திருப்புமுனையாக தயாநிதி மாறனின் ராஜினாமா வரை வந்துள்ளது.
இந்த சம்பவத்தில், முதல்வரின் பேச்சை மீறி, பிரச்சனைக்கு காரணமான அந்த கருத்துகணிப்பை வெளியிட்டது கலாநிதியின் தவறு தான்.
சன் குழுமம், இவ்வளவு பெரிய ஸ்தாபனமாக வளர்வதற்க்கு காரணம் தி.மு.க மற்றும் கலைஞர் என்பது மறுக்க முடியாத உண்மை. இல்லாமலா சன் குழுமத்தின் வர்த்தக அலுவலகம், தி.மு.க அறக்கட்டளைக்கு சொந்தமான அறிவாலயதில் செயல்படும்? இதற்காவது கலாநிதி, அவரின் தாத்தா பேச்சை இந்த கருத்து கணிப்பு விசயத்தில் கேட்டு இருக்கலாம்.
இது இப்படி இருக்க, ஒன்றுமே செய்யாத தயாநிதி எதற்கு பலி கெடா ஆனார்? இந்த ராஜினாமாவால், இந்தியா ஒரு திறமையான, இளம் அமைச்சரை இழந்துள்ளது. தமிழ்நாடுக்கு இன்னும் இழப்பு அதிகம் தான்.
இவை இப்படி இருக்க, தினகரன் அலுவலக தாக்குதல் சம்பவம் தொடர்பாக, முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார்?
இந்த குடும்ப பிரச்சனை முற்றி மூன்று உயிர்கள் பலியாகி உள்ளன. இது இன்னும் எங்கு சென்று முடியுமோ தெரியவில்லை?