இதொ ஒரு எடுத்துக்காட்டு!

தற்பொது உள்ள அரசு, மிக திட்டவட்டமாக, புதிய டிஜிட்டல் மீட்டர் எல்லா ஆட்டோகளிலும் பொருத்த வேண்டும் என்று கூறிய பிண்பு, புதிய ஆட்டோ கட்டணம் அட்டவணை கொடுத்தும் கூட, யாரும் பின்பற்றுவது இல்லை!
சென்ற வாரம், நான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையதில் இருந்து அண்ணா நகர் வர, ரூ.120 தர வேண்டியது ஆயிற்று. அரசு வெளியிட்ட அட்டவணை படி பார்த்தால் இதற்கு ரூ.75 முதல் ரூ.80 வரையே ஆகும்.
எனக்கு தெரிந்த வரை, பம்பாய், புது தில்லி,ஹைதராபாத் விட சென்னை ஆட்டோ கட்டணம் மிக மிக அதிகம்!
2 comments:
வாய்கூசாமல் கட்டனம் கேட்பார்கள் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள். எந்த அரசாங்கத்தாலையும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இதனால்தான் பெண்களும் இப்போழுதெல்லாம் சொந்த வாகனத்தில்தான் பயணம் செய்கிறார்கள்...
ஆமாம் ஹரி!
ஆனால், உள்ளுர் வாசிகளை அப்படியாவது தப்பி விடலாம், இதனால் வெளியூர் வாசிகளே அதிகம் பாதிக்கபடுகிறார்கள்!
Post a Comment