Tuesday, August 7, 2007

தமிழ்நாட்டில் இரண்டு சூரியன்!


ஆம், இனி தமிழ் தொலைகாட்சி பட்டியலில் இரண்டு சூரியன். ஒன்று, ஏற்கெனவே இருக்கும் சன் டிவி.. மற்றோன்று புதிதாக வரவிருக்கும் கலைஞர் டிவி. இது மாறன் சகோதரர்கள் மற்றும் கலைஞர் மோதலால் முலைக்கும் தொலைக்காட்சி.
இது தி.மு.க வின் அதிகாரபூர்வ சேனலாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள்து.
சிவாஜி, தசாவதாரம் போன்ற பெரிய படங்களை வாங்கி விட்டதாக பேச்சு அடிபடுகிறது. அதுமட்டுமில்லாமல், மெகா தொடருக்காக குஷ்பு, இசைஞானி இளையராஜா, பாலசந்தர் போன்ற பிரபலங்கள் இந்த டிவிக்காக முன்வந்து உள்ளார்கள்.

இதற்கு பிறகு, மெகா டிவி, வசந்த் டிவி, ஜெயா ப்ளஸ், என்று சேனல்கள் வரிசையாக இந்த வருடதிற்குள் வந்து விடும். வந்தால், தமிழ் சேனல்களின் எண்ணிக்கை 20 ஆகிவிடும்.

தமிழ் டிவி ரசிகர்களுக்கு கொண்டட்டம் தான்!~

இந்தியாவில் வேலை வாய்ப்பு!?

சில நாட்களாக, சென்னை மாநகரில், வெள்ளைகாரர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
என்ன விசயம் என்று ஒரு வெள்ளைகார பெண்னை நிறுத்தி கேட்டேன், அதற்கு அவள் செர்பியாவில் இருந்து வந்து இருப்பதாகவும், இங்கு ஒரு நிறுவனத்தில் பயிற்சிக்காக வந்து இருப்பதாகவும் சொன்னால். மேலும் விசரித்ததில், தென்னிந்தியாவிர்க்கு மட்டும் 1500 வெளிநாட்டினர் வந்து இருப்பதாக கூறினார்.
அதும் இல்லாமல் அவர்களுக்கு இந்தியா எல்லா விததிலும் மலிவாக இருக்கிறதாம்.
என் கேள்வி என்ன என்றால், இங்கு இருப்பவர்க்கே முழு வேலைவாய்ப்பு இல்லை, இதில் எப்படி இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டினர்க்கு வேலை வாய்ப்பு தருகிறது?