Tuesday, August 7, 2007

தமிழ்நாட்டில் இரண்டு சூரியன்!


ஆம், இனி தமிழ் தொலைகாட்சி பட்டியலில் இரண்டு சூரியன். ஒன்று, ஏற்கெனவே இருக்கும் சன் டிவி.. மற்றோன்று புதிதாக வரவிருக்கும் கலைஞர் டிவி. இது மாறன் சகோதரர்கள் மற்றும் கலைஞர் மோதலால் முலைக்கும் தொலைக்காட்சி.
இது தி.மு.க வின் அதிகாரபூர்வ சேனலாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள்து.
சிவாஜி, தசாவதாரம் போன்ற பெரிய படங்களை வாங்கி விட்டதாக பேச்சு அடிபடுகிறது. அதுமட்டுமில்லாமல், மெகா தொடருக்காக குஷ்பு, இசைஞானி இளையராஜா, பாலசந்தர் போன்ற பிரபலங்கள் இந்த டிவிக்காக முன்வந்து உள்ளார்கள்.

இதற்கு பிறகு, மெகா டிவி, வசந்த் டிவி, ஜெயா ப்ளஸ், என்று சேனல்கள் வரிசையாக இந்த வருடதிற்குள் வந்து விடும். வந்தால், தமிழ் சேனல்களின் எண்ணிக்கை 20 ஆகிவிடும்.

தமிழ் டிவி ரசிகர்களுக்கு கொண்டட்டம் தான்!~

2 comments:

Anonymous said...

"காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு" என்பது கருணாநிதியின் குடும்ப விவகாரங்களில் சரியாகத்தான் அமைகிறது. என்னதான் இருந்தாலும் மு.க. ஸ்டாலினும், மு.க. அழகிரியும் மாறனை விட முக்கியமானவர்கள்தான்.

Loggy : லோகி said...

அது சரி, அது அவுங்க குடும்ப விசயம்! நமக்கேன் வம்பு!