Tuesday, August 10, 2010

இன்செப்சன்(INCEPTION)(கனவு வேட்டை) திரை விமர்சனம்

சற்றே சோம்பேறித்தனமாக இருந்த எனக்கு.. இன்னுமா இந்த திரைபடத்தை பற்றி ஒரு விமர்சனம் கூட எழுதாமல் இருகிறாய்.. அன்று என் கனவில் என்னை போன்றே தோற்றம் அளிக்கும் ஒரு நூறு பேர் வந்து கேட்டார்கள்..
விழித்தேன்..சரி என்று முடிவு செய்து இதோ எழுத ஆரம்பித்து விட்டேன்.

இன்செப்சன்(INCEPTION), தமிழிலில் கனவு வேட்டை என்று வெளியாகியது.. கதை கரு இது தான், நாயகன் கேப்ரியோ ஒரு கனவு திருடன், மற்றவர்கள் கனவில் சென்று ஒரு ரகசியதையோ அல்லது ஒரு ஐடியாவையோ விதைத்து விட்டு வருபவன்.
இந்த படத்தை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும், அதே சமயம், எல்லாருக்கும் புரிந்ததா என்று கேட்டல் அதுவும் இல்லை..
ஏன் என்றால், நோலன்(இயக்குனர்) நினைத்தது அதுவே. படத்தில் சொல்வது போல ஒரு ஐடியாவை நம்முள் விதைத்து விட்டால்,அது நம் மண்டயை போட்டு குடைந்து நம்மை ஒரு வழி பண்ணி விடும். நோலன் அந்த விதையை இந்த திரைப்படம் மூலமாக நம்முள் விதைத்து இருக்கிறார்.
எப்படி என்றால், கதை படி நாயகன், ஒரு ஆளின் கனவில் சென்று ஒரு ஐடியாவை விதைக்கவேண்டும் அதற்கு, கனவுக்குள் கனவு என்பது போல, ஐந்து அடுக்கு கனவுக்குள் செல்கிறார், மீண்டும் அந்த ஐந்து அடுக்கு கனவில் இருந்து திரும்பி நிஜ வாழ்வுக்கு வந்தாரா இல்லையா என்பது தான் கிளைமாக்ஸ். அங்க தான் நோலன் நம்மள ஒரு வழி பன்னிருவார்.
கனவில் இருந்து வந்ததை அந்த கதாபாத்திரம் எதாவது ஒரு பொருளை (இது போல கனவு ரூள்ஸ் நிறையவே படத்துல இருக்கு, அதை படம் பார்த்தல் தான் புரியும் )வைத்து கண்டுபிடித்துக்கொள்ளும் , அது மாதிரி நம்ம நாயகன் ஒரு பம்பரம் வைத்து இருப்பார், அந்த பம்பரத்தை உருட்டிவிட்டு, நின்றுவிட்டால் அவர் நிஜ உலகில் இருக்கிறார் என்று அர்த்தம், ஆனால் பம்பரம் நிற்காமலே முடிவில்லாமல் சுழன்று கொண்டே இருந்தால் அவர் கனவில் இருக்கிறார் என்று அர்த்தம், .

இப்படியாக கடைசி காட்சியில் நாயகன் தான் கனவில் இருகிறாரா இல்லையா என்பதை உறுதி செய்ய பம்பரத்தை உருட்டுகிறார், உருட்டிவிட்டுவிட்டு தன் குழந்தைகளை நீண்ட நாட்கள் பின்பு பார்த்த சந்தோஷத்தில் அதை கண்டுகொள்ளாமல் குழந்தைகளிடம் சென்று விடுகிறார். காமிரா பம்பரத்தை காட்டுகிறது, பம்பரம் லேசாக சுழன்று கொண்டே ஆடுகிறது.. படம் முடிகிறது..
ஆகா அது ஒரு மர்மமாக முடியும்.

மொத்தத்தில் அந்த கதை நாயகன் கூட நிம்மதியா இருப்பான் , ஆனா படம் பார்த்து நாம தான் ரெண்டு நாளைக்கு மண்டைய போட்டு பிச்சிக்கணும்.

உலகம் முழுக்க இந்த படம் பார்த்த அனைவர் மூலையிலும் சென்று ஒரு ஐடியாவை விதைத்து விட்டு வருகிறார் நோலன், அதில் அவருக்கு வெற்றியே!

உண்மையான முடிவை, நோலனே பத்திரிக்கை சந்திப்பு வெச்சு சொன்னதான் உண்டு!

7 comments:

Hari said...

மிகவும் அற்புதமான விமர்சனம், லோகேஷ்!

உன் தமிழில் சில இடங்களில் பிழைகள் உள்ளன, ஆனால் அதெல்லாம் சிறிய குறைகள். நன்றாக சுவாரசியமாகத்தான் எழுதுகிறாய்!

Loggy : லோகி said...

நன்றி.. ஹரி..
இந்த மொழிபெயர்ப்பு மென்பொருள் மூலமா .. சில பிழைகள் வருது தவிர்க்க முடியல.. மீண்டும் சரிபார்த்து திருத்திக்கொள்கிறேன்..
பெரிய அளவு அர்த்தத்தை பாதிக்கும் தவறு இருந்தால்.. தயவு செய்து மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.. நன்றி..

Hari said...
This comment has been removed by the author.
Hari said...

சிறு சிறு பிழைகள்தான். நான் குற்றமாக கூறவில்லை.

http://www.tamildict.com/

மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் எழுத்துக்கோர்வையை சரிபார்க்கலாம்.

Loggy : லோகி said...

நன்றி ஹரி..

Ramjee said...

hi, where you a owner of an Audio Company named, "Logesh Audio" which released some devotional songs (on Krishna) a couple of decades ago? If yes, let me know your contacts at ramjee dot n at gmail dot com

Loggy : லோகி said...

sorry thts not me.