Thursday, December 10, 2009

எம்.ஜி.ஆர் பட டைட்டில்..

சமீப காலமாக, பழைய படங்களின் டைட்டில் வைத்து சில படங்கள் வெளிவருகிறது.
"ஏன்யா? உங்களுக்கு தமிழ்ல வேற தலைப்பே கிடைகலையான்னு கேட்டா?, கதைக்கு இந்த டைட்டில் தான் கரெக்டா இருந்துச்சுன்னு சொல்றாங்க நம்ம டைரடக்கர்ஸ். "
அதில் மிக முக்கியமா, எம்.ஜி.ஆர் பட டைட்டில் மேல நிறைய பேருக்கு ஒரு கண்ணு.
உதாரணமா..
-ரகசிய போலீஸ் (சரத் குமார்)
-நம் நாடு (சரத் குமார் மீண்டும்)
-நாடோடி மன்னன் (அதே சரத் குமார்)
-அன்பே வா (நடிகர்கள் எல்லாம் தெரியாத மறந்து போன முகங்கள்) இந்த படம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த மிக சிறந்த பொழுதுபோக்கு திரை படம், அந்த டைட்டில் மேல என்ன கொலவெறியோ..

இப்படி நிறைய..
இன்னும் படங்கள் வந்ததா என்று தெரியவில்லை.. அப்படி தெரிந்தால் பின்னூட்டத்தில் யாரவது தெரியபடுத்துங்கள்..

சரி இப்ப இதுல என்ன மேட்டர்னு பாத்தீங்கனா, இந்த புது படங்க எல்லாமே.. சூப்பர்.. டூபர்.. பிளாப் ஆனா படங்கள்.. இதுவரைக்கும் எனக்கு தெரிஞ்சு எம்.ஜி.ஆர் பட டைட்டில் மறுபடியும் வைத்து வந்த அணைத்து திரைப்படங்களும் மிகபெரிய தோல்வியை தழுவிய திரைப்படங்கள்.

சரி போனது போகட்டும்..
இப்போ விஜய் நடிக்கும்.. வேட்டைக்காரன்..
செல்வராகவனின், ஆயிரத்தில் ஒருவன்..
ரெண்டுமே எம்.ஜி.ஆர் பட தலைப்பு தான்.. இது ரெண்டாவது தப்புமா? இல்லை மேலே நான் சொன்னது போல இதுவும் ஊதிக்குமா? பொறுத்து இருந்து பாப்போம்..
டிசம்பர் 18 வேட்டைக்காரன் ரிலீஸ்.. இந்த லாஜிக் வேலை செய்யுத பாப்போம்..
அட லாஜிக் கெடக்குது.. இவுனுங்க படத்த நல்லா எடுத்தா நம்ம பார்க்கவா மாட்டேன்குறோம்..

பின் குறிப்பு: இந்த தலைப்பு மேட்டர், சில வாரங்கள் முன்பு ஒரு வார இதழில் கிடைத்த துணுக்கு செய்தி.. வலை நண்பர்களுக்காக இங்கே எனது இடுக்கையில்..

6 comments:

Hari said...

"காதல் கத்திரிக்காய்", "வெங்காயம்", "முருங்கக்கா மண்டயா!" என்ற தலைப்பு உள்ள படங்களை நான் தயாரிக்கப்போகிறேன். இப்படங்கள் வெலைவாசி உயர்வைப்பற்றி கருத்துக்கள் தெரிவிக்கப்போகின்றன...

Hari
http://harishankar.org/blog

praveenc85 said...

என்ன பண்றது.. தலைப்புகளுக்கு பஞ்சமாயிடுச்சா? இல்லை எம்.ஜி.ஆர் படத்தோட தலைப்பை வைத்தாலாவது படம் ஓடும்னு நப்பாசையா?
எது எப்படியோ "வேட்டைக்காரன்" ஓடும்.. ஆனா ஓடாது..... ஹ ஹா ஹா...

Loggy : லோகி said...

@hari.. வரே வா.. நல்ல ஐடியா.. அது இருக்கட்டும் ஹீரோயின் யாரு? :D

Loggy : லோகி said...

@praveen எம்.ஜி.ஆர் பட டைட்டில்ல கெடுக்காம இருக்கணும்கறது தான் என்னோட ஆசை..
உங்க வேட்டைக்காரன் பஞ்சு சூபரு.. ஹி ஹி..

Hari said...

ஹீரோயின்லாம் பயன் படுத்தக்கூடாது. அது ஒரு போதைப் பொருள்! :)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in