Sunday, November 7, 2010

வா குவாட்டர் கட்டிங் திரை விமர்சனம் - Va Quarter Cutting Tamil Movie Review

சென்னையில் ஜல் புயல் ஞாயிறு இரவு கரையை கடக்கும் என்று தொலைக்காட்சி செய்தியில் கூறிக்கொண்டு இருந்தார்கள். அதையும் மீறி என் அம்மா, "டேய், மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது, இந்த நேரத்துல உனக்கு சினிமா என்ன தேவை?" என்று கேட்டார்கள். அதெல்லாம் முடியாது டிக்கெட் முன்பதிவு செய்தாசுன்னு சொல்லி, அம்மா செய்த பிரியாணி கூட சாப்பிடாமல் இந்த படத்துக்கு சென்னை மாயாஜால் திரை அரங்கிற்கு நாங்கள் நண்பர்கள் நாலு பேர் சென்றோம்.
மாயாஜாலில் ஏற்கனவே பத்து திரைகள், அது இல்லாமல் மேலும் நான்கு திரைகள் திறந்துள்ளார்கள். அந்த புது திரை ஒன்றில் சென்று அமர்ந்தேன்.

இண்டர்வல் விட்டார்கள், பொதுவா, டாய்லெட் சென்று விட்டு , பாப்கார்ன், அல்லது குடிக்க ஏதாவது வாங்கி விட்டு தான் வந்து உட்காருவோம். ,ஆனால், அப்போது நண்பரில் ஒருத்தர், "இதுக்கு மேல இந்த படத்த பாக்கணுமா...." என்று சொல்லி முடிக்கவில்லை.. அனைவரும் அடுத்த நிமிடமே கொட்டும் மழையில் மறுபடியும் ஓடி வந்து வாகனத்தில் அமர்ந்து சென்னையை நோக்கி பறந்தோம்.

என்ன?, படத்தை பற்றி எதுவுமே சொல்லவில்லை என்று பார்கிறீர்களா? என்னத்த சொல்ல.. ???

இனிமேல் இந்த புஷ்கர்-காயத்ரி இயக்கிய படத்திற்கு செல்ல கூடாது என்ற ஒரு உறுதியான தீர்மானத்தை எடுத்து விட்டேன். அது என்னவோ தெரியல இந்த விளமபர பட இயக்குனர்கள் இரண்டு நிமிட படங்களை நன்றாக எடுக்கிறார்கள், இரண்டு மணி நேர படத்தை நன்றாக கொண்டு சொல்ல தெரியவில்லை. எனக்கு தெரிஞ்சு, இந்திய சினிமாவுல அப்படி விளம்பர படத்துல இருந்து பொது சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் யாரும் இல்லை தான் என்று தோன்றுகிறது.
இது தான் கொடுமைன்னு பார்த்தா.. மாமன் பெற கேடுக்குறதுகுன்னே ஒரு இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ் குமார். ஒரு பாட்டு கூட சொல்ற மாறி இல்லை.
நடித்தவர்களில், சிவாவை நினைச்சா தான் பாவமா இருக்கு, தெரியாம இந்த படத்துல வந்து மாட்டிகிட்டார் போல. அவுரு என்னவோ குடுத்த வேலைய தான் செஞ்சு இருக்கார்.
படத்தின் ஒளிப்பதிவு மட்டுமே சூப்பர் என்று சொல்லலாம்.

சாதாரணமாவே நான் விமர்சனம் எழுதும் போது கதை எழுத மாட்டேன்.. கதை இல்லாத படத்துக்கு நான் என்ன கதை எழுத?

வா குவாட்டர் கட்டிங்... -------வா....குவாக்(வாந்தி) கட்டிங்...

உத்தமபுத்திரன் திரை விமர்சனம் - Uthamaputhiran Movie Review



டிரைலர்களை பார்த்து கொஞ்சம் எதிர்பார்ப்பு கம்மியாக தான் சென்றேன் இந்த படத்துக்கு.
முதல் பாதி என்னவோ கொஞ்சம் கிளிஷே காட்சிகளுடன் செல்லும் படம், தெலுங்கு பட ரீமேக் என்பதை நன்றாக நினைவூட்டும்.
ஆனால் பின்பாதியில் காட்சிகள் கொஞ்சம் சிரிப்பு மூட்டத்தான் செய்கிறது. முக்கியமாக விவேக் நடிப்பு. சமீபகாலமாக விவேக் தனது தனித்தன்மை நடிப்பை இழந்து வருவது போன்று தெரிந்தது, அனால் இந்த படத்தில் எமோசனல் ஏகாம்பரம் வேடத்தில் செம்ம ராவடி செய்து இருக்கிறார். விவேக் ஒரு புதிய நடிப்பு பரிணாமத்தில் நடித்து இருக்கிறார்.
படத்தில் ஏகப்பட்ட நடிகர் பட்டாளம். பாக்யராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, அம்பிகா, என்று தெரிந்த பழைய முகங்கள் பல.
ஜெனிலியாவுக்கு நடிக்கும் வேலை இதில் மிக மிக கம்மி. ஏதோ தெலுங்கில் நடித்ததுக்கு மறுபடியும் இழுத்து வந்து இருப்பாங்க போல..
தனுஷ்.. வழக்கம் போலவே நடித்து இருக்கிறார். ஆனால் இவர் இல்லை என்றால், இரண்டாம் பாதி விவேக் காமெடிகள் அவ்வளவு கலை கட்டி இருக்காது. தனுஷ்-விவேக் காம்பினேசன் காமெடி இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் டெவலப் ஆகித்தான் இருக்கிறது.
ரீமேக் படம் என்பதால் , இயக்குனருக்கு பெரிய வேலை இருந்தது போல தெரியவில்லை.
பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி நினைவில் கொஞ்சம் கூட நிற்கவில்லை. விஜய் அன்டனி என்று டைட்டில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

படம் என்னவோ ரொம்ப நீளம், மூன்று மணி நேரம் தாண்டியும் ஓடுகிறது. அதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

படத்தில் குறிப்பிட்ட ஒரு ஜாதி பெயரை அதிகம் குறிப்பிட்டு இருகிறார்கள். இந்த விஷயம் இப்போதைய தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்த ஒரு விஷயம். அதை தவிர்த்து இருக்கலாம். தெலுங்கில் தான் ரெட்டியும், நாயடுவும் தவிர்க்க முடியாத பெயர்கள் அதற்காக தமிழிலும் அது போல் சேர்க்க வேண்டுமா?

சூரிய குடும்பம், நிதி குடும்பங்கள் வெளி இடாததால், படம் நல்ல இருக்காது என்று நினைக்க வேண்டாம்.

உத்தமபுத்திரன், குடும்பத்துடன் சென்று கல கலவென பார்க்கலாம்.
அது சரி இந்த படத்துக்கு எடுக்கு உத்தமபுத்திரன் என்று தலைப்பு என்று எனக்கு கடைசி வரை புரியவில்லை.

Friday, November 5, 2010

மைனா திரை விமர்சனம் - Mynaa: Tamil Movie Review


இந்த வருட தீபாவளி ரிலீஸ்களிலேயே கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படுத்திய படம்.
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னரே சினிமா துறையில் முக்கியமானவர்களுக்கு எல்லாம் பிரிவியு காட்சி போடப்பட்டது. பார்த்து விட்டு சில பேர் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தது போல அப்படி ஒன்றும் இந்த படத்தில் இல்லை.
ஒரு வித்தியாசமான படம் வெற்றி பெற்றால் அதே பாணியில் படங்கள் எடுப்பது நம் தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடப்பது.
இது, பருத்திவீரன் கதை பாதிப்பில் வந்த திரைப்படம்.
வித்தியாசம் என்று சொல்வதற்கு, ஒன்றும் தனித்தன்மை பெரிதாக இல்லை. சாதாரண காதல் கதை தான். அதை மனசில் பதிய வைக்க இயக்குனர் மிகவும் மெனக்கெடுகிறார் , ஆனால் பருத்திவீரன் போல கிளைமாக்ஸ் வைத்தால் படம் ஹிட்டு என்று தப்பு கணக்கு போட்டு, செயற்கையான கிளைமாக்ஸ் அமைத்து சொதப்பல் ஆக்கி இருக்கிறார். சில பேருக்கு அது பிடித்தது, என்னைப்போல் வித்தியாசத்தை நம்பி சென்றவர்க்கு வெறும் ஏமாற்றமே.

திரைக்கதை வேண்டுமானால் அருமை என்று சொல்லலாம். ஆனால் அதிலும், சில காட்சிகள் கொஞ்சம் தேவை இல்லாதது. ஜுராசிக் பார்க் 2 -ஆம் பாகத்தில், அந்த வேன் தொங்கும் காட்சி போல, விறுவிறுப்புக்காக காபி அடித்து இருக்கிறார்கள்.
போலீஸ்காரராக வரும் தம்பி ராமையா நடிப்பு அற்புதம், அங்கங்கே சிரிக்க வைக்கிறார். போலீஸ் வேலை பார்பவரின் வேதனையை இந்த கதாபாத்திரம் மற்றும் அந்த ஜெயிலர் கதாபாத்திரத்தில் காண்பித்து இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

இசை இமான். இந்த படம் மூலம் சற்று ஒரு படி ஏறித்தான் இருக்கிறார். பாடல்கள் கொஞ்சம் சுமாராக இருந்தாலும், பின்னணி இசையில் சிக்சர் அடிக்கிறார்.
ஹீரோயின் அநாகா, நன்றாக நடிக்கிறார், அதுவே ஆறுதல் தரும் விஷயம். மேக்கப் பெரிதாக இல்லை. இருந்தும் அழகாக இருக்கிறார். தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டோம் என்ற சந்தோசத்தோடு, சென்னை தேவி திரை அரங்கில் முதல் காட்சி பார்த்து விட்டு வெளியில் வந்த அவரை பார்த்த போதே தெரிந்தது.
ஹீரோ நன்றாக நடிக்கிறார், ஏனோ மனதில் பதியவில்லை.

இயக்குனர் பிரபு சாலமன், தனது முந்தய முயற்சிகளில் சற்று சறுக்கி இருந்தாலும் , இந்த படம் கொஞ்சம் அவருக்கு பெயர் கொடுக்கும் என்று சொல்லலாம். தீபாவளி வெளியீட்டில் கொஞ்சம் ஆறுதல் தரும் திரைப்படம் மைனா, என்று நண்பர்கள் சொன்னார்கள். அதனால் படம் நிச்சயமாக தோல்வி அல்ல! ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கி தப்பி கொள்ளும் என்று நினைக்கிறேன்.

மைனா உயரே பறக்க ஆசைப்பட்ட குருவி!