Sunday, November 7, 2010

உத்தமபுத்திரன் திரை விமர்சனம் - Uthamaputhiran Movie Review



டிரைலர்களை பார்த்து கொஞ்சம் எதிர்பார்ப்பு கம்மியாக தான் சென்றேன் இந்த படத்துக்கு.
முதல் பாதி என்னவோ கொஞ்சம் கிளிஷே காட்சிகளுடன் செல்லும் படம், தெலுங்கு பட ரீமேக் என்பதை நன்றாக நினைவூட்டும்.
ஆனால் பின்பாதியில் காட்சிகள் கொஞ்சம் சிரிப்பு மூட்டத்தான் செய்கிறது. முக்கியமாக விவேக் நடிப்பு. சமீபகாலமாக விவேக் தனது தனித்தன்மை நடிப்பை இழந்து வருவது போன்று தெரிந்தது, அனால் இந்த படத்தில் எமோசனல் ஏகாம்பரம் வேடத்தில் செம்ம ராவடி செய்து இருக்கிறார். விவேக் ஒரு புதிய நடிப்பு பரிணாமத்தில் நடித்து இருக்கிறார்.
படத்தில் ஏகப்பட்ட நடிகர் பட்டாளம். பாக்யராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, அம்பிகா, என்று தெரிந்த பழைய முகங்கள் பல.
ஜெனிலியாவுக்கு நடிக்கும் வேலை இதில் மிக மிக கம்மி. ஏதோ தெலுங்கில் நடித்ததுக்கு மறுபடியும் இழுத்து வந்து இருப்பாங்க போல..
தனுஷ்.. வழக்கம் போலவே நடித்து இருக்கிறார். ஆனால் இவர் இல்லை என்றால், இரண்டாம் பாதி விவேக் காமெடிகள் அவ்வளவு கலை கட்டி இருக்காது. தனுஷ்-விவேக் காம்பினேசன் காமெடி இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் டெவலப் ஆகித்தான் இருக்கிறது.
ரீமேக் படம் என்பதால் , இயக்குனருக்கு பெரிய வேலை இருந்தது போல தெரியவில்லை.
பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி நினைவில் கொஞ்சம் கூட நிற்கவில்லை. விஜய் அன்டனி என்று டைட்டில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

படம் என்னவோ ரொம்ப நீளம், மூன்று மணி நேரம் தாண்டியும் ஓடுகிறது. அதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

படத்தில் குறிப்பிட்ட ஒரு ஜாதி பெயரை அதிகம் குறிப்பிட்டு இருகிறார்கள். இந்த விஷயம் இப்போதைய தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்த ஒரு விஷயம். அதை தவிர்த்து இருக்கலாம். தெலுங்கில் தான் ரெட்டியும், நாயடுவும் தவிர்க்க முடியாத பெயர்கள் அதற்காக தமிழிலும் அது போல் சேர்க்க வேண்டுமா?

சூரிய குடும்பம், நிதி குடும்பங்கள் வெளி இடாததால், படம் நல்ல இருக்காது என்று நினைக்க வேண்டாம்.

உத்தமபுத்திரன், குடும்பத்துடன் சென்று கல கலவென பார்க்கலாம்.
அது சரி இந்த படத்துக்கு எடுக்கு உத்தமபுத்திரன் என்று தலைப்பு என்று எனக்கு கடைசி வரை புரியவில்லை.

No comments: