Friday, November 5, 2010

மைனா திரை விமர்சனம் - Mynaa: Tamil Movie Review


இந்த வருட தீபாவளி ரிலீஸ்களிலேயே கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படுத்திய படம்.
இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னரே சினிமா துறையில் முக்கியமானவர்களுக்கு எல்லாம் பிரிவியு காட்சி போடப்பட்டது. பார்த்து விட்டு சில பேர் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தது போல அப்படி ஒன்றும் இந்த படத்தில் இல்லை.
ஒரு வித்தியாசமான படம் வெற்றி பெற்றால் அதே பாணியில் படங்கள் எடுப்பது நம் தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடப்பது.
இது, பருத்திவீரன் கதை பாதிப்பில் வந்த திரைப்படம்.
வித்தியாசம் என்று சொல்வதற்கு, ஒன்றும் தனித்தன்மை பெரிதாக இல்லை. சாதாரண காதல் கதை தான். அதை மனசில் பதிய வைக்க இயக்குனர் மிகவும் மெனக்கெடுகிறார் , ஆனால் பருத்திவீரன் போல கிளைமாக்ஸ் வைத்தால் படம் ஹிட்டு என்று தப்பு கணக்கு போட்டு, செயற்கையான கிளைமாக்ஸ் அமைத்து சொதப்பல் ஆக்கி இருக்கிறார். சில பேருக்கு அது பிடித்தது, என்னைப்போல் வித்தியாசத்தை நம்பி சென்றவர்க்கு வெறும் ஏமாற்றமே.

திரைக்கதை வேண்டுமானால் அருமை என்று சொல்லலாம். ஆனால் அதிலும், சில காட்சிகள் கொஞ்சம் தேவை இல்லாதது. ஜுராசிக் பார்க் 2 -ஆம் பாகத்தில், அந்த வேன் தொங்கும் காட்சி போல, விறுவிறுப்புக்காக காபி அடித்து இருக்கிறார்கள்.
போலீஸ்காரராக வரும் தம்பி ராமையா நடிப்பு அற்புதம், அங்கங்கே சிரிக்க வைக்கிறார். போலீஸ் வேலை பார்பவரின் வேதனையை இந்த கதாபாத்திரம் மற்றும் அந்த ஜெயிலர் கதாபாத்திரத்தில் காண்பித்து இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

இசை இமான். இந்த படம் மூலம் சற்று ஒரு படி ஏறித்தான் இருக்கிறார். பாடல்கள் கொஞ்சம் சுமாராக இருந்தாலும், பின்னணி இசையில் சிக்சர் அடிக்கிறார்.
ஹீரோயின் அநாகா, நன்றாக நடிக்கிறார், அதுவே ஆறுதல் தரும் விஷயம். மேக்கப் பெரிதாக இல்லை. இருந்தும் அழகாக இருக்கிறார். தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டோம் என்ற சந்தோசத்தோடு, சென்னை தேவி திரை அரங்கில் முதல் காட்சி பார்த்து விட்டு வெளியில் வந்த அவரை பார்த்த போதே தெரிந்தது.
ஹீரோ நன்றாக நடிக்கிறார், ஏனோ மனதில் பதியவில்லை.

இயக்குனர் பிரபு சாலமன், தனது முந்தய முயற்சிகளில் சற்று சறுக்கி இருந்தாலும் , இந்த படம் கொஞ்சம் அவருக்கு பெயர் கொடுக்கும் என்று சொல்லலாம். தீபாவளி வெளியீட்டில் கொஞ்சம் ஆறுதல் தரும் திரைப்படம் மைனா, என்று நண்பர்கள் சொன்னார்கள். அதனால் படம் நிச்சயமாக தோல்வி அல்ல! ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கி தப்பி கொள்ளும் என்று நினைக்கிறேன்.

மைனா உயரே பறக்க ஆசைப்பட்ட குருவி!

2 comments:

praveenc85 said...

மைனா உயரே பறக்க ஆசைப்பட்ட குருவி!/// நல்ல பஞ்ச்... உங்கள் எழுத்து மேலும் மெருகு ஏறுகிறது.... வாழ்த்துக்கள்...

Loggy : லோகி said...

ஒ.. அப்படியா.. நன்றி.. நன்றி..