Monday, September 13, 2010

பாஸ் (எ) பாஸ்கரன் திரை விமர்சனம் - Boss (a) Baskaran Movie Review

களவாணி, நான் சமீப காலத்தில் ரசித்து பார்த்த அற்புதமான திரைப்படம். திரைக்கதை எள் அளவும் சுவாரஸ்யம் குறையாமல் எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த திரைப்படம் பற்றி விமர்சனம் எழுத நினைத்து, பிறகு மிகவும் கால தாமதம் ஆனதால், இதற்கு அப்புறம் எழுதினால் ரொம்ப பழைய விமர்சனம் ஆகி விடும் என்ற காரணத்தால் அப்படியே கைவிட்டுவிட்டேன்.

களவானிக்கு பிறகு, நான் ரசித்து பார்த்த படம் பாஸ் (எ) பாஸ்கரன்.
இந்த படமும் படம் பார்ப்பவர்களை சற்றும் போர் அடிக்காமல், முழு நக்கல் நய்யாண்டி வசனங்களோடு எடுத்த படம். சந்தானம், இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லுமளவுக்கு, படம் முழுக்க, ஹீரோ ஆர்யாவுடனே பயணிக்கும் ஒரு கதாபாத்திரம். ஆகவே இது சந்தானத்தை மட்டுமே நம்பி பின்னப்பட்ட திரைக்கதை.

கதை ரொம்ப சாதாரணம் தான்,
ஹீரோ ஆர்யா , யார் பேச்சும் கேட்காமல், அரியர்ஸ் வைத்துக்கொண்டு ஊர் சுற்றும் பையன். பார்த்தவுடன் நயன்தாராவுடன் காதல். தன் திருமணம் பற்றி பேச போக, வெட்டியாக சுத்துவதை மற்றவர்கள் சுட்டி காட்ட, சபதம் ஏற்று, வீட்டை விட்டு வெளியே வருகிறார், திரும்பவும் தன் சபதத்தில் ஜெயித்தாரா என்பது தான் மீதி கதை.
திரைக்கதை தான் இந்த படத்தின் முதுகெலும்பே, அது மட்டும் இல்லை என்றால், இது மற்ற படங்களை போல படு மொக்கையாக போய் இருக்கும்.

மிக நீண்ட நாட்கள் பிறகு ஆர்யா ஒரு ஜாலியான கதாபாத்திரம் ஏற்று இருக்கிறார். அதில் பக்காவாக ஸ்கோர் செய்கிறார்.

நயன்தாரா பாவம், ஏதோ நோய் போல, மிகவும் பரிதாபமாக காட்சி அளிக்கிறார். அய்யா, வல்லவன் போன்ற படங்களில் நாம் பார்த்த அழகு கொலு கொலு நயன் இனி நாம் எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார் போல இருக்கு. கன்னம் ஒட்டி, புருவம் வரைந்து எதோ எயிட்ஸ் நோயாளி போல் காட்சி அளிக்கிறார். முன்பு தன் அழகால் நம் தூக்கத்தை கெடுத்த நயன், இன்று தன் பயானக முகத்தால் தூக்கத்தை கெடுக்கிறார்.

சந்தானம், இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். இவர் வரும் எல்லா காட்சியிலும் அரங்கம் அதிர்கிறது. முன்பு, கவுண்டமணி சாயலில் நடிப்பார் என்ற குற்றச்சாட்டு இருக்கும், இந்த படத்தில் அது துளியும் இல்லை. முழுக்க முழக்க இது சந்தானம் நடிப்பு என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் நல்ல தேர்ச்சி. தொன்னூறுகளில், கவுண்டமணியை நம்பியே திரைப்படங்கள் எடுக்கப்பட்டு ஓடின, இது போல ஒரு வாய்ப்பு இனி சந்தானத்துக்கும் அமையும். இனி வரும் படங்களில் நிச்சயம், சந்தானம் ஒரு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக இருப்பார்.

ஆர்யாவின் அண்ணனாக வரும் பஞ்சு அருணாச்சலத்தின் மகன், நல்ல நடிப்பை காட்டுகிறார். இனி தமிழ் சினிமாவின் ஹீரோக்களுக்கு நல்ல அண்ணன் கிடைத்துவிட்டார்.

ஆர்யாவின் அண்ணியாக வரும் விஜயலட்சுமி(பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வரும் நாயகி), இன்னும் அழகாக தான் இருக்கிறார், சொல்ல போனால் நயன்தாராவை விட திரையில் அழகாக தெரிகிறார். அண்ணி கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து இருக்கிறார்.

இது தவிர ஜீவா கௌரவ தோற்றத்தில் வந்து பின்னி பெடல் எடுக்கிறார். ஐந்தே நிமிடங்கள் வந்து ஒரு கலக்கு கலக்கி படத்தை முடிக்கிறார். நான் மிகவும் ரசித்த காட்சியில் ஒன்று "அங்கிள் அங்கிள், அப்பா கிட்ட சொல்லாதீங்க அங்கிள்". படம் பாருங்க அப்பொழுதான் அந்த காட்சியின் கலாட்டா உங்களுக்கு புரியும்.

படம் முழுக்க உள்ள நிறைய வசனங்கள் காலேஜ் யுத்களின் பேச்சுக்களில் சீக்கிரம் காண முடியும்.
"நண்பேண்டா" ஏற்கெனவே எஸ்.எம்.எஸ் களில் பறந்து கொண்டு இருக்கிறது.
மேலும், அந்த வெற்றி குறி மேட்டரும் ரொம்ப பிரபலம்.
எனவே இது முழுக்க முழுக்க இளசுகளுக்காகவே.

இடைவேளைக்கு பிறகு சில காட்சிகள் சற்று மெதுவாக செல்வது போல் இருக்கும், ஆனால் அது மற்ற விறுவிறுப்பு காட்சிகளின் பாதிப்பு என்று தான் சொல்லணும். ஆங்காங்கே ரெட்டை அர்த்த வசனங்கள், அதை சிறிது குறைத்து இருக்கலாம்.
எஸ்.எம்.எஸ் வெற்றிக்கு பிறகு, மீண்டும் ஒரு வெற்றி படம் எடுத்து உள்ளார் இயக்குனர் ராஜேஷ்.
ராஜேஷ், என் சொந்த ஊர் சேலத்தை சேர்ந்தவர் என்று நண்பர் சொன்னார். அப்படி இருந்தால் இன்னும் பெருமை. திரைக்கதையில், நிச்சயம் நன்றாக கொண்டு செல்லும் திறமை இருக்கிறது, அதே போல, கனமான கதையிலும் கவனம் செலுத்தினால், ராஜேஷை இன்னொரு பாக்யராஜ் என்று திரை உலகம் கொண்டாடும்.

ஆகா மொத்தம், பாஸ் (எ) பாஸ்கரன், காலேஜ் இளசுகள், நண்பர் கூட்டத்தோடு சென்று, கத்தி கலாட்ட செய்து பார்க்க வேண்டிய படம்.

4 comments:

Unknown said...

review is fine.. but at some area u have judged the future of santhanam and the director.... y dont u judge for the hero and the heroine... also i think this the first film for aarya to take up such movie...

Loggy : லோகி said...

ok thank you! thanks for taking your time and visiting my blog!

praveenc85 said...

///களவாணி திரைப்படம் பற்றி விமர்சனம் எழுத நினைத்து, பிறகு மிகவும் கால தாமதம் ஆனதால், இதற்கு அப்புறம் எழுதினால் ரொம்ப பழைய விமர்சனம் ஆகி விடும் என்ற காரணத்தால் அப்படியே கைவிட்டுவிட்டேன்.///
எழுதுனா தப்பே இல்ல.. இன்னமும் நான் எழுதின சுறா விமர்சனத்துக்கு கூட்டம் வருதுனா பாருங்களேன்...


///இனி வரும் படங்களில் நிச்சயம், சந்தானம் ஒரு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக இருப்பார். ///
தில்லாலங்கடியிலேயே அவர் நடிப்பு பளிச்சிட்டது...வெறும் டயலாக்கை மட்டுமே நம்பாமல் முகபாவங்களிலும் அசத்த ஆரம்பித்து விட்டார்.. "ஐயம் பக்கர்".... ஹா ஹா..

///கனமான கதையிலும் கவனம் செலுத்தினால், ராஜேஷை இன்னொரு பாக்யராஜ் என்று திரை உலகம் கொண்டாடும்.///
முற்றிலும் உண்மை... கதை, திரைக்கதையில் ராஜேஷ் கவனம் செலுத்தினால் மட்டுமே அவர் சிறந்த படைப்பாளியாக கருதப்படுவார்...

மேலும் எழுத வாழ்த்துக்கள்.....

Loggy : லோகி said...

விடுங்க பிரவீன், நான் சுரால விட்டதா, காவல் காதல்ல புடிசுர்றேன்.

வருகை மற்றும் பின்னூடத்திற்கு நன்றி..