Thursday, September 16, 2010

கொமரம் புலி(தெலுங்கு) திரை விமர்சனம் : Komaram Puli Movie Review

நான் சாதரணமாக தெலுங்கு படங்களை பார்ப்பதுண்டு. அதிலும் முக்கியமாக சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் திரைப்படங்களை காண்பேன்.
சொல்லபோனால் அல்லு அர்ஜுனும், மகேஷ் பாபுவும் வந்த பிறகு தான் தெலுங்கு சினிமாவில், சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது.
நான் கடைசியாக ரசித்த படம் மகதீரா. பெரிய பொருட்செலவில், நல்ல திரைக்கதை அமைப்போடு வந்த திரைப்படம். ஆந்திராவில் பல வசூல் சாதனை படைத்தது.
இப்போது , நண்பருடன் கொமரம் புலி படத்தை பார்த்தேன்.
நமது எஸ்.ஜெ.சூர்யா இயக்கத்தில், நம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, சிரஞ்சீவி தம்பி பவன் கல்யான் நடித்த படம்.

கதை என்னவோ , நாம் தமிழ் சினிமாவில் பார்த்து புளித்து போன கதைதான் , ஹீரோவின் தந்தை நேர்மையான போலீஸ், வில்லனால் கொலை செய்ய படுகிறார், தாய் வைராக்யத்துடன் தன் மகனை பெற்று, வளர்த்து, போலீஸ் ஆக்குகிறார். வழக்கம் போல ஹீரோவும் ஒரு நேர்மையான போலீஸ் ஆபிசர். முதல்வன் படத்தில் வரும் புகார் பெட்டி போல, இதில் புகார் டெலிபோன் பூத் வைத்து மக்கள் குறைகளை போக்குகிறார். ஒரு வழியாக வில்லன் குறுக்கில் வர , நிறைய மோதி, கடைசியாக, புதிய பலி, பழைய பலி எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு முடிவுக்கு வந்து, சுபம் கார்ட் போடுகிறார்கள்.

படம் முழுக்க தும்மல் வரும் அளவுக்கு மசாலா தூக்கலாக தான் இருக்கிறது. என்ன பண்ணுவது அது தெலுங்கு படத்துக்கே உரித்தான ஒரு பாணி. தெலுங்கு மக்கள் என்னவோ மாறிட்டாங்க தான் , அங்கே படம் எடுப்பவர்கள் தான் இன்னும் அதே பாணியில் படம் எடுத்து கொல்லுகிறார்கள்.

திரைக்கதை என்னவோ ஆங்காங்கே நன்றாக போனாலும், பல இடங்களில் சறுக்குகிறது. முக்கியமாக நம்ம எஸ்.ஜெ.சூர்யாவின் டிரெட்மார்க் சில்மிஷ காட்சிகள் ரெண்டு மூணு வருகிறது(அதில் ஒரு காட்சி நம்ம "அ ஆ" படத்தில் வரும் காட்சியின் ரீமேக்) , அது வரும் போதெல்லாம் தியேட்டரில் மக்கள் முகம் சுளிக்கவே செய்கிறார்கள். அதே போல எஸ்.ஜெ.சூர்யா சில நாட்கள் படம் ஏதும் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்து ஆங்கில படங்களை பார்த்து இருப்பார் போல இருக்கு, அதை அப்படியே இந்த படத்தில் காப்பி அடித்து போட்டு இருக்கிறார் .
உதாரணதுக்கு, ஹீரோவின் தாய் சரண்யா கிணற்றில் குழந்தை பெற்றுக்கொள்ளும் காட்சி அப்படியே மெல் கிப்சனின் அபோகேளிப்டோ (Apocalypto) படித்தில் வரும் காட்சியின் அப்பட்டமான காப்பி.
மேலும் ஹீரோ அறிமுக காட்சியில் வரும் சண்டை காட்சி, எதோ லோ பட்ஜெட் சைனீஸ் படத்தில் பார்த்தது போன்ற ஞாபகம். இது போல படத்தில் நிறைய காட்சிகள் உள்ளன.

பவன் கல்யான் கச்சிதமாக நடித்து இருக்கிறார் . ரொம்ப சிரத்தை எடுத்து நடித்து இருபது கண்கூடாக தெரியும். ஆனா என்ன, நிறைய இடங்கள்ள நம்ம எஸ்.ஜெ.சூர்யா பேசுற மாறியே இருக்கும். அது முற்றிலும் இயக்குனரின் வேலைதான் . பொதுவாக எல்லா எஸ்.ஜெ.சூர்யா படங்களில் , ஹீரோவை அவரை மாறி தான் பேசவைப்பார்.

ஹீரோயின் நிகிஷா பட்டேல், புது முகம், பயங்கர அழகு. லேசாக நடிக்கவும் செய்கிறார் . தமிழுக்கு வந்தால் ஒரு ரவுண்டு வரலாம். காத்திருப்போம்!

ஹீரோவின் அம்மாவாக நம்ம சரண்யா, இப்போது வரும் படங்களில் எல்லாம் அம்மா கேரக்டர்ணா இவங்களை தான் போடுறாங்க. அதே போல தன் வேலையை கச்சிதமாக செய்கிறார். படத்தில் பாராட்டுற அளவுக்கு நடித்தவர்னு சொல்ல போனா அது சரண்யா மட்டும் தான்.

நாசர், போலீசா வரார். சுத்தமா வேஸ்ட் பண்ணி இருக்காங்க.
வில்லன் மனோஜ் பாஜ்பாய், மிரட்டலா இல்லைனாலும், கரக்டா நடிச்சு இருக்கார்.
இது தவிர, ஸ்ரேயா ஒரு பாடலுக்கு, சரண்ராஜ், மற்ற எல்லாரும் எதுக்கு வராங்கன்னே தெரில.

இசை நம்ம ஆஸ்கார் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஜெ.சூர்யா ரொம்ப தொல்லை பண்ணி இருப்பார் போல, பாடல்களை ஏனோதானோன்னு தான் போட்டு இருக்கார். பின்னணி இசை பரவாயில்லை.

இந்த படத்தை நான் முக்கியமாக பார்த்த காரணம், நம்ம விஜய் இந்த கதையில் நடிக்க வேண்டி இருந்தது. கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார். விஜய் வேண்டாம் என்று சொல்லி, சுமாராக ஓடிய படங்கள் என்று பார்த்தால் அநேகமாக இது ஒன்றாக தான் இருக்கும். சிங்கம் படத்தை கூட விஜய் வேண்டாம் என்று தான் சொன்னாராம். கடைசியில் சூர்யா நடித்து, படம் ஓஹோவென ஓடி தீர்தது. சரி, விஜய் பற்றி வேற எப்பவாச்சும் பேசலாம்.
தெலுங்கில் வெற்றி பெற்றால் எஸ்.ஜெ.சூர்யா மீண்டும் தமிழில் வேறு ஹீரோவை வைத்து எடுப்பதாக இருந்தாராம். படம் சரியாக போகாததால், அநேகமாக அந்த என்னத்தை டிராப் செய்து இருப்பார்.

ஆண்டவன் புண்ணியத்தில், ஆந்திராவில் படம் ஒரு அளவுக்கு சுமார ஓடிட்டா பரவாயில்லை, இல்லேன்னா, எஸ்.ஜெ.சூர்யா படம் இயக்குவதை விட்டுட்டு, மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவரும் அபாயம் இருக்கிறது. உஷார்!

2 comments:

praveenc85 said...

///ஆண்டவன் புண்ணியத்தில், ஆந்திராவில் படம் ஒரு அளவுக்கு சுமார ஓடிட்டா பரவாயில்லை, இல்லேன்னா, எஸ்.ஜெ.சூர்யா படம் இயக்குவதை விட்டுட்டு, மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவரும் அபாயம் இருக்கிறது. உஷார்!///
ஹா ஹா உண்மை... அவரு அப்டியே ஆந்திரா பக்கமே ஓடிடட்டும்... தொல்ல தாங்காது.. ஆனா மனுஷன் எப்படி தான் ரஹ்மானிடம் கால்ஷீட் வாங்கராருனு தெரியலையே...

Loggy : லோகி said...

//ஆனா மனுஷன் எப்படி தான் ரஹ்மானிடம் கால்ஷீட் வாங்கராருனு தெரியலையே...//

எல்லாம் நட்பு ஏற்பட்ட ஒரே காரணத்துக்கு தான்..